ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேரடியான தீர்மானங்களை எடுக்கும் நபர் எனவும் அவர் அண்மையில் அப்படியான சில தீர்மானங்களை எடுத்ததாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேசா விதானகே தெரிவித்துள்ளார்.
சஜித் பிரேமதாசவும் அப்படியான நேரடியான தீர்மானங்களை எடுக்கும் நபர் என்பதால், இதனால், அடுத்த பொதுத் தேர்தலின் பின்னர் கோட்டாபய ராஜபக்சவுக்கு பொருத்தமான வகையில் சஜித் பிரேமதாசவின் கீழ் அரசாங்கம் ஒன்றை அமைக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி பெரும்பான்மை பலத்துடன் கூடிய அரசாங்கத்தை அமைக்க முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு எந்த வகையிலும் 113 பெரும்பான்மை பலத்தை பெற முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் ஹேசா விதானகே குறிப்பிட்டுள்ளார்.